நீட் விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு
இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக NTA நீட் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி மதியம் 2 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் ஆகஸ்ட் 15 இரவு 11.50 வரை நீட்டிக்கப்படும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்