மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அடிப்பதாக கூறிய ஒன்றிய அமைச்சர் ரானே அதிரடி கைது
மகாராஷ்டிராமுதல்வர்உத்தவ்தாக்கரேவைஅவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டார் .
பா.ஜ.கவினர் மக்கள் ஆசி யாத்திரை என்கிற பெயரில் நாடு முழுவதும் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி சமீபத்தில்
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று உரை நிகழத்திய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, 'இது எத்தனையாவது சுதந்திர தினம்?' என்று அருகில் இருந்த உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டு, '75வது ஆண்டு சுதந்திர தினம்' என்று கூறியுள்ளார்.ஒரு முதல்வருக்கு எத்தனையாவது சுதந்திர தினம் என்பது தெரியாதது வெட்கக்கேடானது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் உத்தவ் தாக்கரேயின் கன்னத்தில அறைந்திருப்பேன் எனப் பேசினார்.
இதனையடுத்து ராணே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உத்தவ் தாக்கரேவை அவமதித்ததாக சிவசேனா தொண்டர்கள் தொடர் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். மும்பை, நாசிக் , புனே போன்ற பகுதிகளில் பாஜக அலுவலகங்கள்மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
அமைச்சர் நாராயண் ரானே தன் மீதான கைது நடவடிக்கைக்குத் தடை கோரியும், அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
பின்னர், மகாராஷ்டிர போலிஸார் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 8 மணி நேர தடுப்பு காவலுக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
Tags: இந்திய செய்திகள்