Breaking News

பார் கவுன்சில் விதிகளைப் பின்பற்றாமல் சட்டப்படிப்பை நடத்த முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம் 3 ஆண்டு, 2 ஆண்டுகளுக்கான சட்டப்படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 


இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்கஅண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாண்புமிகு நீதிபதி அளித்த தீர்ப்பில், 

அகில இந்திய பார் கவுன்சில்விதிகளைப் பின்பற்றாமல், அண்ணாமலைப் பல்கலை., சட்டப்படிப்புகளை நடத்த முடியாது எனவும், இந்த படிப்புகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்க்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். 

சட்டப்படிப்புகளை வழங்கும்போது, அனைத்து பல்கலை.கழகங்களும் அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback