செப் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையம் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளிட்ட தமிழக அரசு முழுவிவரம்...
செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ளதையடுத்து தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
அங்கன்வாடி மையத்திற்குள் பணியாளர்கள் நுழையும் போது கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்
அத்துடன் அங்கன்வாடி பணியாளர்கள் விரல்களில் நகப்பூச்சு பயன்படுத்தக்கூடாது
அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சூடான உணவு வழங்க வேண்டும்.
காலை 11.30 முதல் 12.30 மணி வரை அங்கன்வாடிகளிலேயே மதிய உணவை வழங்கிட வேண்டும்
ஞாயிறு தவிர 6 நாட்களுக்கு மதிய உணவு வழங்குவது கட்டாயம்
என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்