ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ல் அறிமுகம் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஓலா மின்சார ஸ்கூட்டர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஓலா' மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு குறித்த அறிவிப்பினை ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. மேலும் சார்ஜ் செய்யும் வசதியுடன் கூடிய ஓலா மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் ஓலா மின்சார ஸ்கூட்டர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்
Tags: முக்கிய செய்தி