Breaking News

அமீரகத்தில் 10 ஆண்டு கோல்டன் விசா பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர்

அட்மின் மீடியா
0
கோல்டன் விசா என்றால் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது. 

ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கவுரவமாக நடத்தப்படுவார்கள். இதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் இந்த கோல்டன் விசாவினை பெற்றுள்ளனர். 


நஸ்ரின் பேகம்:

தமிழகத்தைச் சேர்ந்த நஸ்ரின் பேகம் என்ற பெண் மருத்துவருக்கு இந்த விசா கிடைத்துள்ளது. திருச்சியில் உள்ள சங்கரா ஆயுர்வேதிக் கல்லூரியில் படித்த இவர் கடந்த 2013 ம் ஆண்டில் அமீரகம் வந்துள்ளார். 

2017 ம் ஆண்டில் மருத்துவ உரிமம் பெற்ற இவர் அதிலிருந்து மூன்று வருடங்களுக்கு மேலாக அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது அமீரக அரசு நஸ்ரினுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. 


தமிழகத்திற்க்கு முதல் விசா

தமிழகத்திலிருந்து இந்த கோல்டன் விசாவை பெற்ற முதல் பெண் மருத்துவர் நஸ்ரின் பேகம் என்பது குறிப்பிடத்தக்கது.




Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback