ஏ.டி.எம்.,மில் பணம் இல்லாத வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!
அக்டோபர் 1 முதல் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது
வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டது அதில் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப்ப எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பணம் எடுத்து கொள்ளலாம், ஆனால் பல நேரங்களில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இது தொடர்பாக ஏராளமான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன.அவற்றை பரிசீலித்த ரிசர்வ் வங்கி, ஏ.டி.எம்., இயந்திரங்களில் உரிய நேரத்தில் பணம் நிரப்பாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
அக்., 1 முதல் தொடர்ச்சியாக 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருக்கும் ஏ.டி.எம்.,மின் வங்கிக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:-
https://www.rbi.org.in/Scripts/NotificationUser.aspx?Id=12144&Mode=0
Tags: தமிழக செய்திகள்