குட் நியூஸ்! இன்று முதல் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு! ரூ.100க்கு கீழ் விற்பனை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன.
அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில்
நேற்று 13.08.2021
பெட்ரோல் லிட்டர் 102.49 ரூபாய்,
டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
இன்று 14.08.2021
பெட்ரோல் விலை 3.02 ரூபாய் குறைந்து லிட்டர் 99.47 ரூபாய்க்கும்,
டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசின் நடவடிக்கையால் பெட்ரோல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்