Breaking News

FACT CHECK சீனாவில் வரலாறு காணாத மழை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. என பரவும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சீனாவில் வரலாறு காணாத மழையாம். 1000 வருட காலத்தில் இல்லாத மழையாம். விமானங்களும், ஹெலிகாப்டர்களும், லாரிகளும், பஸ்களும், கார்களும் இழுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சி. உலகை அழிக்க நினைத்த சீனாவுக்கு இறைவன் கொடுத்த தண்டனையோ!என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சீனாவில் கனமழை காரணமாக அங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டது உண்மை தான் அது பற்றி நாம் கூட செய்தி வெளியிட்டு இருந்தோம் ஆனால் பலரும் ஷேர் செய்யப்படும் வீடியோவில் உள்ளது போல் விமானம் ,ஹெலிகாப்டர்கள் அடித்து செல்லவில்லை, மேலும்


பலரும் ஷேர் செய்யப்படும் வீடியோ தற்போது சீனாவில் நடந்தது இல்லை
மாறாக கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த நிலநடக்கதிற்க்கு பிறகு வந்த சுனாமியால் ஏற்பட்டது ஆகும்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.wsj.com/video/raw-footage-of-planes-swept-away-by-japan-tsunami/83E82791-4FE7-4808-A834-A7D766CB64B9.html


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback