Breaking News

இனி போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய விடுமுறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

அட்மின் மீடியா
0
காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழக போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு





இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ,

காவலர்கள் தங்களது உடலை பேணிக்காக ஏதுவாகவும்,தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் வாரத்தில் ஒருநாள் கட்டாய் ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.

வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கு ஒய்வு தினத்தன்று பணியில் இருக்கும் போலீசாருக்கு மிகைநேர ஊதியம் வழங்க வேண்டும். 

காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற விஷே நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

தமிழக காவல்துறை சார்பாக பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி மாவட்ட/ மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback