ஊரடங்கு நீட்டிப்பு இன்று முதல் தமிழகத்தில் இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு! இவற்றுக்கெல்லாம் அனுமதி !!முழு விவரம்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படுகின்றன.
மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்துபோக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சிகள் செயல்படலாம்.
உணவகம், விடுதி, தேநீர் கடைகளில் காலை 6 முதல்இரவு 8 மணிவரை 50 சதவீதம் பேர் அமர்ந்து தேநீர், உணவு அருந்தலாம்.
உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம்.
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல்இரவு 8 மணி வரை இயங்கும்.
அனைத்து கடைகளும் காலை 9 முதல் இரவு 8 மணிவரை செயல்படலாம்.
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இவற்றிக்குக்கெல்லாம் தடை நீட்டிப்பு?
மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து தடை நீட்டிப்பு
வணிக வளாகங்களில் உள்ளதிரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு
திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை.
அனைத்து மதுக்கூடங்கள் (Bar) திறக்க அனுமதி இல்லை.
நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை.
பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை
திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
உயிரியல் பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை
திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
Tags: தமிழக செய்திகள்