Breaking News

கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு : இன்று பதவியேற்ப்பு

அட்மின் மீடியா
0

கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். 

இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த எடியூரப்பாவும் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையின் இறுதியில் பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

அதனை தொடர்ந்து இன்று  காலை பதவியேற்க ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 


Tags: இந்திய செய்திகள்

Share this