புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு.
புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு.
புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்
முன்னதாக புதுச்சேரியில் ஜூலை 16ஆம் தேதி முதல் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது
இதற்க்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார். பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
Tags: இந்திய செய்திகள்