இன்றும், நாளையும் வானில் அரிய நிகழ்வு: வெறும் கண்களால் வானில் செவ்வாய், வெள்ளி கோள்களை பார்க்கலாம்!
இன்று வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்
இன்றும் நாளையும் வானில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கோள்களும் பூமிக்கு மிக நெருக்கமாக நெருங்கி வரும் என்று கூறியுள்ளார்.
எப்போது தெரியும்
இன்று மாலை சூரியன் மறைந்த பின் சூரியன் மறைந்த இடத்தின் அருகே வானத்தைப் பார்த்தால் இரு கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதை தெளிவாக காணலாம்.
அதாவது சூரியன் மறைந்த பின்னர் சரியாக 45 நிமிடங்களுக்கு பிறகு செவ்வாய், வெள்ளி ஆகிய இரு கோள்கள் வெறும் கண்களால் பார்க்கும் வகையில் தெரியும் என்றும் பொதுமக்கள் அவற்றை கண்டு ரசிக்கலாம்
இந்த இரு கோள்களுக்கு இடையே வானில் வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.
இந்த நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்கலாமா?
வானில் தோன்றும் இந்த அரிய நிகழ்வுகளை இன்றும் நாளையும் வெறும் கண்களால் கூட பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம்