சாலையில் ஓடும் கார்!! பட்டனை தட்டினால் பறக்கும் அதிநவீன கார் அறிமுகம்....வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
இந்த காரை ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த கார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த காரில் 160 குதிரைத்திறன் கொண்ட பிஎம்டபிள்யூ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
சாலையில் செல்லும்போது இறக்கைகள் சுருங்கி கொள்ளும். வானில் பறக்கும்போது விரித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கார் 170 கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது.
இந்த கார் சாதாரண காரிலிருந்து பறக்கும் காராக மாற எடுத்துக்கொள்ளும் நேரம் 2 நிமிடம் 15 வினாடிகள்.நைட்ரா மற்றும் பிராட்டிஸ்லாவா என்ற இரு விமான நிலையங்களுக்கு இடையே இந்த காருக்கான சோதனையோட்டம் நடைபெற்றது 93 கிலோமீட்டர் வான்வழி தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தது இந்த கார் மேலும் இந்த கார் பறப்பதற்கு மற்றும் தரை இறங்குவதற்கு ஓடுபாதை அவசியம் அவசியமாகும்
https://www.youtube.com/watch?v=z0wpUinEBJ4
Tags: வைரல் வீடியோ