இந்தியாவில் முதல்முறை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த எம்பிக்கு 6 மாதம் சிறை தண்டனை!
2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றது அதில் தெலுங்கானாவில் உள்ள மகபுபாபாத் மக்களவை தொகுதியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த கவிதா மாலோத் வேட்பாளராகக் களமிறங்கினார்.
அப்போது கவிதாவின் உதவியாளர் சவுகத் அலி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது கையும் களவுமாகப் தேர்தல் பறக்கும்படையால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.ஆனாலும் அந்த தேர்தலில் சுமார் 1,50,000/- வாக்குகள் வித்தியாசத்தில் கவிதாமாலோத் வெற்றிபெற்றார்.
இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.ஆதாரத்துடன் சிக்கியதால் சிறப்பு நீதிமன்றம் கவிதாவையும் அவரது உதவியாளர் சவுகத் அலியையும் குற்றவாளிகளாக உறுதிசெய்தது. ஆகவே இருவருக்கும் தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக இருவருக்கும் ஜாமின் வழங்கியது
Tags: இந்திய செய்திகள்