Breaking News

FACT CHECK: பாகிஸ்தானில் ஓநாய் போன்ற விசித்திர மிருகம் கடித்து இறந்தவர்கள் என பரவும் வதந்தி: யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாகிஸ்தானில் விசித்திர மிருகம் பலரை கடித்து குதறியுள்ளது என்று  ஒரு வீடியோவையும் அதனுடன் ஓர் ஆடியோவையும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

 
 
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவும் ஆடியோவும் பொய்யானது ஆகும்

பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ளது போல் எந்த மிருகமும் உயிருடன் இல்லை,

பலரும் ஷேர் செய்யும் அந்த மிருகம் ஒரு படத்திற்க்காக உருவாக்க பட்ட ஒரு பொம்மை ஆகும்

போர்த்துகீசிய குறும்படமான Lobisomem Morto a Tiros என்ற படத்திற்க்காக உருவாக்கப்பட்டது ஆகும்

இந்த படம் குறித்து tremulous motion pictures பட குழுவினர் தங்கள் டிவிட்டர், பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமில் கடந்த 13.012.2020 அன்றே பதிவிட்டுள்ளார்கள்

மேலும் பலரும் அந்த ஓநாய் வீடியோவுடன் ஓநாய் மனிதன் கடித்தவர்கள் என ஷேர் செய்யும் வீடியோ கடந்த 18.06.2019 அன்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பில் இரு போட்டி குழுக்கள் இடயே ஏற்பட்ட ஆயுத மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் அதற்க்கான ஆதரைத்தையும் கீழே இணைத்துள்ளோம்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்





அட்மின் மீடியாவின் ஆதாரம்
 
 
 
அட்மின் மீடியாவின் ஆதாரம்
 
 
அட்மின் மீடியாவின் ஆதாரம்

 
அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback