Breaking News

FACT CHECK:தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர EMIS எண் மட்டும் போதுமா ? உண்மை என்ன? முழு விவரம்

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்க்கும் போது, எந்த ஒரு குழந்தைக்கும் மாற்று சான்றிதழ்(TC) தேவை இல்லை. குழந்தையின் ஆதார் எண்ணை நீங்கள் சேர்க்கும் பள்ளியில் கொடுத்தால் போதுமானது. அவர்களாகவே உங்களுடைய EMIS Number ஐ எடுத்துக்கொள்வார்கள். தனியார் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டோ அல்லது EMIS Number ஐ கேட்டோ பணம் கட்டி ஏமாற வேண்டாம்.  என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது




அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்த தகவல் உண்மையா என மேல்மலையனூர் அரசு பள்ளி ஆசிரியர் அப்துல் ரஷீத் அவர்களிடம் கேட்டபோது...

EMIS நம்பர் என்பது தமிழகத்தில் படிக்கும் மாணவர்களின் அடையாள எண் ஆகும். இந்த எண் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வழங்கப்படும் எண் ஆகும்

அந்த  எண்ணை பயன்படுத்தி EMIS இணையத்தில் https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard  சென்றால் அந்த மாணவன் எந்த பள்ளியில், என்ன வகுப்பு படித்துக்கொண்டு உள்ளான் என்கின்ற விவரங்கள் வரும். 

அதே போல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் T C தேவை இல்லை.எமிஸ் நம்பர் இருந்தால் போதுமானது ஆகும். அவர்களை பள்ளியில் சேர்த்துகொள்ளலாம்.


மேலும் எமிஸ் நம்பர் இல்லை என்றாலும் மாணவர்களின் ஆதார் கார்டு, மற்றும் பிறப்பு சான்றிதழ் கொண்டும் அட்மிசன் போட்டு கொள்ளலாம், அதன் பிறகு அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மாணவனின் ஆதார் எண்ணை கொண்டு எமிஸ் அதிகாரிகளிடம் மாணவனின் எமிஸ் நம்பரை பெற்று கொள்லலாம்

ஆனால் அதே சமயம்  9 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேர விரும்பும் மாணவர்களுக்கு TC கட்டாயாம் ஆகும். EMIS எண்ணை வைத்துக்கொண்டு மாணவர்களை அட்மிசன் போடமுடியாது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback