Breaking News

FACT CHECK காசியாபாத்தில் முதியவரை அடித்த 3 பேரை பொதுமக்கள் அடிக்கும் வீடியோ : உண்மையா? முழு விவரம்...

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  காஜியாத்தில் முஸ்லிம் முதியவரை தாக்கி தாடியை வெட்டி அடித்து துன்புருத்திய நான்கு குண்டர்களில் ஒருவன் போலிஸில் பிடி பட்டுள்ளான் மீதி மூண்று பேருக்கு பொது மக்களே தண்டனை கொடுத்து விட்டணர். என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவிற்க்கும் காசியாபாத்தில் நடந்த முதியவர் சம்பவத்திற்க்கும் தொடர்பு இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த சம்பவம் கடந்த 12.06.2021 அன்று டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில்  நடந்தது ஆகும்

இந்த மூன்று பேரும் காய்கறி விற்பனையாளரிடமிருந்து மிரட்டி பணம் பறிக்க வந்ததாக கூறப்படுகிறது. அந்த காய்கறி விற்பனையாளர் கூச்சல் எழுப்பிய பின்னர், மூன்று பேரைப் பொதுமக்கள் பிடித்து குச்சியால் அடித்தது போலிசாரிடம் ஒப்படைத்தார்கள் அந்த  மூன்று பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்

ஆனால் சிலர் அந்த சம்பவம் காஸியாபாத்தில் உள்ள முதியவரை தாக்கியவர்களை பொதுமக்கள் தாக்கும் வீடியோ என பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=taEbxC9VVgY

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback