இனி எந்த வைரஸ் வந்தாலும் பரவாயில்லை அனைத்தையும் எதிர்க்கும் சூப்பர் வேக்சினை கண்டுபிடித்துள்ள அமேரிக்கா
தற்போது கொரோனா வைரஸ் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி அதிகரித்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் வேக்சின் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.
அமெரிக்காவின் யு.வி.ஏ ஹெல்த் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீவன் எல். ஜீச்னெர் மற்றும் வர்ஜீனியா டெக்கின் சியாங்-ஜின் மெங் என்ற இரு விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில், தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.
Source:
Tags: வெளிநாட்டு செய்திகள்