ஜூன் மாத ரேஷன்! இன்று முதல் டோக்கன் விநியோகம்!!
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கான டோக்கனை நியாய விலை கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கவுள்ளனர்.டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்
அரசின் அறிவிப்பின் படி,
கோதுமை மாவு- 1 கிலோ,
உப்பு- 1 கிலோ,
ரவை- 1 கிலோ,
சர்க்கரை- 500 கிராம்,
உளுத்தம் பருப்பு- 500 கிராம்,
புளி- 250 கிராம்,
கடலை பருப்பு- 250 கிராம்,
கடுகு- 100 கிராம்,
சீரகம்- 100 கிராம்,
மஞ்சள் தூள்- 100 கிராம்,
மிளகாய் தூள்- 100 கிராம்,
குளியல் சோப்பு 25 கிராம் - 1,
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1
ஆகியவை ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளது..
Tags: தமிழக செய்திகள்