Breaking News

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு: உங்க பெயர் இருக்கா செக் பன்னுங்க

அட்மின் மீடியா
0

புதுச்சேரி மாநில உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வெளியிட்ட உத்தரவில், இரண்டு மாதங்களுக்குள் வார்டு வாரியான மறுசீரமைப்பு வரையறையை முடிக்க வேண்டும்; அதனை தொடர்ந்து நான்கு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, புதுச்சேரி அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும், அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் வார்டு வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் இடமாற்றம் பற்றிய விவரங்கள் இருந்தால் ஆணையர் அலுவலகத்திலோ  அல்லது நகராட்சி அலுவலகத்திலோ 27ம் தேதி வரை காலை 8.45 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 28ம் தேதி வெளியிடப்படும் மேலும், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை  www.pdymun.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்ய

https://www.pdymun.in/draft-electoral-roll.php




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback