Breaking News

வழிபாட்டுதளங்களை திறக்க அனுமதியுங்கள்: தமிழக முதல்வருக்கு ஜமா அத்துல் உலமா சபை கோரிக்கை

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க  அமல்படுத்தபட்ட ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

                                  
இந்நிலையில் தமிழகத்தில்  ஊரடங்கு தளர்வுகள்  அறிவிக்கும் போது அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் அது குறித்த அறிவிப்பு ஏதும் வரவில்லை


இந்நிலையில்  தமிழக ஜாமா அத்துல் உலமா சபௌ சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு  வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வுகள் அளித்திட கோரி...கோரிக்கை விடுத்துள்ளார்கள் அந்த அறிவிப்பில்....

கொரோனா நோய்த் தொற்றின் விளைவுகளில் மக்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்திருக்கிற சூழலில் மக்களுக்கு மனநிம்மதியளிக்கிற வழிபாட்டுத் தலங்களை திறக்க 21 ஆம் தேதி அரசு அனுமதிக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் பெரிய அளவில் இருந்தது.

இன்றைய அரசின் அறிவிப்பில் வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு சென்னை உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்களை பொதுமக்களுக்காக திறந்துவிட உடனடியாக அனுமதிக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் கேட்டுக்கொள்கிறது. என அந்த கோரிக்கையில் உள்ளது

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback