Breaking News

ஆன்லைன் மூலம் பணம் ஏமாத்திட்டாங்களா? உடனே இந்த நம்பருக்கு கால் பன்னுங்க: மத்திய அரசுஅறிவிப்பு

அட்மின் மீடியா
0
டிஜிட்டல் பரிவர்த்தனையில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படி இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க 155260 என்ற தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்தவர்கள் புகாரளிப்பதற்கான வசதியை இந்த தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது..


தொடர்புடைய மாநில காவல்துறையால் இயக்கப்படும் 155260 உதவி எண்ணை சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொள்ளலாம்.

அழைத்தவரின் பரிவர்த்தனை தகவல்கள் மற்றும் அடிப்படை தனிப்பட்ட தகவல்களை குறித்து கொள்ளும் காவல் செயல்பாட்டாளர்குடிமக்கள் நிதி சைபர் மோசடி தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் டிக்கெட் முறையில் அதை பதிவு செய்வார்.

தொடர்புடைய வங்கிகள்வாலெட்டுகள்வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு அந்த டிக்கெட் சென்றடையும்.

ஒப்புகை எண்ணோடு குறுந்தகவல் ஒன்று பாதிக்கப்பட்ட நபருக்கு அனுப்பப்படும் அதை கொண்டுதேசிய சைபர் குற்றங்கள் தகவல் தளத்தில் https://cybercrime.gov.in/ 24 மணி நேரத்தில் மோசடி குறித்த முழு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

தன்னுடைய தகவல் தளத்தில் டிக்கெட்டை காணும் வங்கிஉட்புற அமைப்புகளில் விவரங்களை சரி பார்க்கும்.

மோசடி செய்யப்பட்ட பணம் வங்கியில் இன்னும் இருக்கும் பட்சத்தில்அதை மோசடிதாரர் எடுக்க முடியாத படி வங்கி செய்யும்பணம் மற்றொரு வங்கிக்கு சென்றிருந்தால்அந்த வங்கிக்கு டிக்கெட் அனுப்பப்படும்மோசடிதாரரின் கைகளுக்கு பணம் சென்றடைவது தடுக்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்.

அனைத்து முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தற்போது இந்த தளத்தில் உள்ளனபாரத ஸ்டேட் வங்கிபஞ்சாப் தேசிய வங்கிபேங்க் ஆஃப் பரோடாபேங்க் ஆஃப் இந்தியாயூனியன் வங்கிஇண்டஸ் இந்த்எச் எஃப் டி சி வங்கிஐசிஐசிஐ வங்கிஆக்சிஸ்யெஸ் மற்றும் கோடக் மகிந்திரா உள்ளிட்ட வங்கிகள் இதில் அடங்கும்பேடிஎம்போன்பேமொபிகிவிக்பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட முக்கிய வாலெட்டுகள் மற்றும் வணிகர்களும் இதில் இணைந்துள்ளனர்.


மத்திய அரசு அறிவிப்பை படிக்க:

 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback