Breaking News

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை: தமிழக அரசு

அட்மின் மீடியா
0

 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை: தமிழக அரசு

 


தமிழகத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு, புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவி காலமும் மேலும் 6 மாதம் நீட்டிப்புக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தனர். 

ஜூன் 30-ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற உள்ளது.

மேலும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று தமிழக அரசு கூறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback