Breaking News

6வயதான எனக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்பு: மோடியிடம் விடியோமூலம் புகார் அளித்த சிறுமி வீடியோ

அட்மின் மீடியா
0

  காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி மஹிரா இர்ஃபான், நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து காஷ்மீர் ஆளுநர் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்

 


வெறும் 45 விநாடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியது

எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?. என்று அந்தச் சிறுமி பேசியுள்ளார்

சிறுமியின் புகார் குறித்து காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்கள் தன் ட்விட்டரில்

மிக அழகான புகார். குழந்தைகளின் அப்பாவித்தனம் கடவுளின் பரிசு. அவர்கள் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகளின் கல்வி தொடர்பான தொடர்பான கொள்கையை மாற்ற பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். 

குறிப்பாக குழந்தைகளின் வீட்டுப்பாட சுமையைக் குறைக்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் புதிய கொள்கையை வரையறுக்க அறிவுறுத்தியுள்ளேன்" என அதில் பதிவிட்டுள்ளார்

 

 

Tags: வைரல் வீடியோ

Share this