கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் வழங்க முடியாது !! மத்திய அரசு
கரோனாவால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசுகளால் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்மந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்கும்படி, கடந்த மே 24-ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது.பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் குறிப்பிடப்பட்ட 12 பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பெருந்தொற்றால் இதுரை பலர் உயிரிழந்துள்ளார்கள் மேலும் இந்த உயிரிழப்பு அதிகரிக்கும். எனவே, உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் இந்த சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருவது பொருத்தமாக இருக்காது.
மேலும் பல்வேறு நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், இந்த நோயால் உயிரிழப்போருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது சரியாக இருக்காது.
எனவே ஒவ்வொரு நபருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால், மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். இழப்பீடு வழங்குவதன் மூலம் கூடுதல் நிதிச்சுமையால், சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE:
Tags: இந்திய செய்திகள்