ஆகஸ்டு 15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு
கொரானா பரவல் காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. .
10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மதிப்பீட்டு முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறையில் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்கள் மீண்டும் ஆகஸ்ட்15 முதல் செப்டம்பர் 15 வரை பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஜூலை 31-ம் தேதி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விருப்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடப்படும்
Tags: இந்திய செய்திகள்