Breaking News

GOOD NEWS! தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் கொரோனா மருந்து அவசர பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்

அட்மின் மீடியா
0

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த அவசரப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது



இந்த மருந்து கரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

கரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. 

அதனால், அந்த மருந்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. 

இந்த மருந்தை டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. 

இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் 2-deoxy-D-glucose 2-DG எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆக்சிஜன் தேவையை குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback