Breaking News

வால்பாறையில் சுற்றுலா சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

வால்பாறையில் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.



வால்பாறை மலைச்சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்ததாக தகவல்...வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி திரும்பிய சுற்றுலா பயணிகளின் வேன், 13-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 10 பேர் உயிரிழந்ததாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வால்பாறைக்கு சுற்றுலா வந்தவர்கள், பொள்ளாட்சிக்கு திரும்பியபோது 13வது கொண்டை ஊசி வளைவில் இருந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானநிலையில், எஞ்சியவர்களும் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback