Breaking News

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 , 6 விலையில்லா சிலிண்டர்கள் , 200 யூனிட் இலவச மின்சாரம் , ஒரு பவுன் தங்கம் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை PDF டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0
.தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை PDF டவுன்லோடு செய்ய



சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணனிடம் வழங்கினார். இரண்டாவது பிரதியை ஆசிரியயையிடம் வழங்கினார். மூன்றாவதாக ஆட்டோ ஓட்டுநருக்கு, நான்காவதாக தூய்மை பணியாளருக்கும், தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் வழங்கினார். அடுத்ததாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, கைத்தறி நெசவாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் தேர்தல் அறிக்கை பிரதி வழங்கப்பட்டது.



தமிழ்நாட்டின் முதல் பெரை தமிழ் மொழி, தமிழ் மொழியின் முதல் பெருமை திருக்குறள். திருக்குறல்மக்கு வழிக்காட்டி. அந்த திருக்குறளில் கூறி இருக்கும் அறம், பொருள், இன்பம் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாராகி இருக்கிறது.

இந்த விஜய்யை நீங்கள் 100 சதவீதம் நம்பலாம், ஊழல் இல்லாத ஆட்சி நடத்தப்படும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். மக்களின் பைசாவை தொட மாட்டேன். ஆட்சிக்கு வந்ததும் சொல்லாததையும் செய்வோம். அது வேற விஷயம். ஆனா, இப்ப செய்ய முடியிறதை செய்யப் போறதை மட்டும்தான் சொல்லியிருக்கோம். 

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு கூடுதல் ஸ்பெஷலாக மாதம் ஒருமுறை வருவேன். மக்கள் என்னை சுலபமாக சந்திக்கலாம்” என்றார்.

மேலும் என்னுடைய அம்மா,அக்கா, தங்கைகள் எல்லோருக்கும் சின்ன வேண்டுகோள்... தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது... அதனால் எனக்காக அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும். அது விஜய்க்கு கொடுக்கிற மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்” என பேசினார்.

✅ 1. ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் மிக்கவர் என்பதை பறை சாற்றும் வெற்றி மகளிர் திட்டங்கள் 👇

➡️ குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500

➡️ ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள்

➡️  மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் + பட்டுச்சேலை

➡️  பள்ளி மாணவர்களின் அம்மாக்களுக்கு ₹15,000 கல்வி உதவி

▶️  மகளிர் குழுக்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன்

✅ 2. உலகத் தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம் 👇

➡️ உறைவிடத்துடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள்

➡️ அனைத்து அரசுப்பளிக்களிலும் உலகத்தர நவீன கட்டமைப்பு 

➡️ உயர்கல்விக்கு ₹20 லட்சம் வரை கல்விக்கடன்

➡️ AI தொழில்நுட்பத்துடன் போட்டித் தேர்வு பயிற்சி

➡️ காமராஜர் சிறப்பு பள்ளிகள் திறக்கப்படும்

➡️ 12 ம் வகுப்புக்கு பிறகு பி.ஹெ.டி வரை படிக்க ரூ.25 லட்சம் வரை யுனிவர்செல் மருத்துவக் காப்பீடு

➡️ உலகம் தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம்

➡️ வேலையில்லாதோருக்கு மாதம் ரூ,4000 உதவித்தொகை

➡️ பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

➡️ இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்

➡️ போதை பொருட்களை தடுக்க கடும் சட்டங்கள்

➡️ கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள்

➡️ 5 ஏக்கர் வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி 

➡️ 5 ஏக்கருக்கு மேல் பயிர்க்கடன் 50 சதவீதம் தள்ளுபடி

✅ 3. மக்கள் நலம் பேணும் சுகாதார உத்தரவாதம் 👇
 
➡️ போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு
 
➡️ குடும்பத்திற்கு ₹25 லட்சம் மருத்துவக் காப்பீடு

➡️ அனைத்து ஊர்களிலும் நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை 

➡️ ஆண்டுதோறும் கட்டணமில்லா சுகாதாரப் பரிசோதனை

✅ 4. இளைஞர்களுக்கு ஏணிப்படிகளாக இருக்கும் உத்தரவாதத் திட்டங்கள் 👇

➡️ வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹4,000 வரை உதவித்தொகை 

➡️  ₹10,000 வரை ஊதியத்தில் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் 

➡️ தொழில் தொடங்க ₹25 லட்சம் கடன்

➡️ ₹18,000 ஊதியத்தில், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

➡️ அரசுத் தேர்வுகளுக்கு கால அட்டவணை

✅ 5. உழவர்கள் உள்ளம் மகிழும் திட்டங்கள் 👇

➡️ 5 ஏக்கர் வரை முழு கடன் தள்ளுபடி; அதற்கு மேல் 50% தள்ளுபடி
 
➡️ நிலமுடைய விவசாயிகளுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி
 
➡️ MSP: நெல் குவிண்டால் ₹3,500; கரும்பு டன் ₹4,500

➡️ விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ₹10,000
 
➡️5 லட்சம் சோலார் பம்புகள், 100% பயிர் காப்பீடு

✅ 6. மீனவர் நலன் காக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள் 👇

➡️  மீன்பிடித் தடைகால நிவாரணம் ₹27,000

➡️ ₹25 லட்சம் விபத்துக் காப்பீடு

➡️மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP)

➡️ அனைத்து மீனவர்களுக்கும் வீடுகள்

✅ 7. மக்கள் உரிமை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம் 👇

➡️ முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ₹3,000

➡️ மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்

➡️ அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்

➡️ நீண்ட காலம் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா

✅ 8. அரசு ஊழியர்கள் நல உத்தரவாதம்

➡️ மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

➡️ ஒப்பந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டில் பணி நிரந்தரம்

➡️ அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹18,000
 
➡️சுகாதார உதவியாளர்களுக்கு ₹10,000 ஊதியம்!

➡️ பணி ஓய்வின் போது ₹15 லட்சம்

➡️ சம வேலைக்குச் சம ஊதியம், பணி நிரந்தரம் 

✅ 9. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உத்தரவாதம் 👇

➡️ 2036-க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரம்

➡️ MSME-களுக்கு ₹15,000 கோடி ஆதரவு, ₹50,00,000 மேம்பாட்டு நிதி

➡️ மாவட்ட வாரியான வளர்ச்சிக்கான 'மாஸ்டர் பிளான்'

➡️ பிரத்யேக AI அமைச்சகம், பல்கலைக்கழகம், AI நகரம் 

➡️ தமிழகத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு  21 நாட்களுக்குள் வணிக உரிமம்

✅ 10. நேர்மையான நல்லாட்சிக்கான உத்தரவாதம் 👇

➡️ அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில்

➡️ அனைத்து அரசு சேவைகளுக்கும் சட்டப்பூர்வக் காலக்கெடு

➡️ லஞ்சமில்லா நிர்வாகம்

➡️ நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம்!

100 சதவீதம் பயிர்க்காப்பீடு செய்ய நடவடிக்கை

5 லட்சம் இலவச சோலார் பம்ப் செட்டுகள் வழங்கப்படும்

செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் உருவாக்கப்படும்

அனைவருக்கும் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் வழங்கப்படும்

ரேசன் பொருட்கள் உள்பட அரசு திட்டங்கள் உங்களின் வீட்டுக்கே வந்து வழங்கப்படும்

மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை

டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500

5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்

கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்

பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.18,000ஆக உயர்த்தப்படும்


PDF டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://tvkvijay.com/ta-IN/manifesto

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback