Breaking News

தோல்வி அடைந்த பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதா முழு விவரம்

அட்மின் மீடியா
0
தோல்வி அடைந்த பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதா முழு விவரம்




நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அந்த மசோதாவுக்கு போதுமான வாக்குகள் கிடைக்காமல் தோல்வி அடைந்தது.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டது

இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய நிலையில், மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 

இதில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு செலுத்தினர். இதில், 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். 

அதில், 278 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறாததால், இந்த மசோதா சபையில் தோல்வியடைந்தது

மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை தேவையாக இருக்கிறது. அந்தவகையில் 326 ஆதரவு வாக்குகள் தேவையாக இருந்தது. ஆனால், இன்றைய வாக்கெடுப்பில், 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். 

இதனால் மசோதா தோல்வி அடைந்தது.குறிப்பாக தொகுதி மறுவரையறையோடு இணைத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் கொண்டுவரப்பட்டதால் அதுவும் தோல்வி அடைந்துள்ளது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback