FACT CHECK: இஸ்ரேல் போர் விமானத்திற்கு “சௌம்யா” என பெயரிட்டார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இஸ்ரேல் தனது யுத்த விமானத்திற்கு சௌமியா என்று பெயர் சூட்டி பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தியது. சௌமியா இந்தியாவை சேர்ந்த செவிலியர் சில நாட்களுக்கு முன்னர் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. அவரின் நினைவாகவே இஸ்ரேல் சௌமியா என்று பெயர்சூட்டி அந்த பெண்ணை பெருமை படுத்தியுள்ளது.என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இஸ்ரேலில் கடந்த ஒரு வாரகாலமாக அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுவீசிதாக்குதல் நடத்திவருவது நாம் அனைவரும் அறிந்ததே இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பற்றி நாம் தேடிப்பார்த்தோம் ஆனால்
இதுவரை நாம் தேடிய வரையில் இஸ்ரேல் அரசு இதுபோல் அறிவித்ததாக எந்தவித செய்தியும் ஆதாரபூர்வமாக கிடைக்கவில்லை
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த ஜெட் விமானம் போட்டோ ஷாப் செய்யபட்டது ஆகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி