Breaking News

FACT CHECK: பாஜக அமைச்சர் திருமதி மேனகா காந்தி சொல்வதை கேளுங்க என பரவும் வீடியோ உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பாஜக அமைச்சர் திருமதி மேனகா காந்திஜி சொல்வதை கவனமாகக் கேளுங்கள்!
எதிர்க்கட்சி மக்கள் பேசவில்லை, கட்சியில் உள்ளவர்கள்  சொல்வதை கவனமாகக் கேளுங்கள்! என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பெண்மணி பாஜகவை சேர்ந்த மேனகா காந்தி இல்லை

அந்த வீடியோவில் உள்ள பெண்ணின் பெயர் டோலி ஷர்மா ஆகும் வயது 36 ஆகும், 

அந்த பெண் பாஜகவை சேர்ந்தவரும் கிடையாது , அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார், மேலும் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காஜியாபாத் தொகுதியில் காங்கிர்ஸ் வேட்பாளாராக நின்று தோற்றும் உள்ளார்

அவர் கடந்த 20.04.2021 அன்று தனது பேஸ்புக் நேரலையில் மக்களுக்கு சில கருத்துகளை வீடியோவாக பதிவிட்டார் அந்த முழு வீடியோவில் கட் செய்து அந்த வீடியோவினை பாஜகவை சேர்ந்த மேனகா காந்தி என பொய்யாக  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

23 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பகுதி 14.15 நிமிடங்களில் வரும்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this