FACT CHECK சவுதி அரசு அளித்த ஆக்சிஜன் லாரியில் ரிலையனஸ் ஸ்டிக்கர் ஒட்டுகின்றார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவுதி அரசு இந்தியாவிற்க்கு அளித்த ஆக்சிஜன் டேங்கர் லாரியில் ரிலையன்ஸ் அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகின்றது என்ன கொடுமை பாருங்க என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானது
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் ஆக்சிஜன் கொடுத்து உதவி வருகின்றார்கள், அது போல் நம் நட்பு நாடுகளும் விமானம் மூலம் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்தி இந்தியாவிற்க்கு உதவி வருகின்றது
அது போல் ரிலையன்ஸ் நிறுவனமும் தன் பங்கிற்க்கு இந்தியாவிற்க்கு ஆக்சிஜன் கொடுத்து உதவி வருகின்றது .அப்படி அவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அளிக்கும் டேங்கர் லாரியில் அவர்கள் நிறுவன ஸ்டிக்கர் ஒட்டுகின்றார்கள் அவ்வளவுதான்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி