Breaking News

FACT CHECK: ராஜஸ்தானில் ஆக்சிஜன் டேங்கரை திறந்துவிட்டு வீணாக்குகின்றார்கள் என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   ஆக்ஸிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு உள்ள வேளையில்.. பிரதமர் மோடி ஆட்சிக்கு கெட்டபெயர் வெறுப்பை ஏற்படுத்த  காங்கிரஸ் கட்சி ஆட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆக்ஸிஜனை திறந்துவிட்டு வீணாக்குகிறார்கள். இப்படி காலி செய்துவிட்டு மேற்கொண்டு ரயிலில் வரும் ஆக்ஸிஜனை வாங்கிக் மறுபடியும் திறந்து விட திட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். பிணங்களின் மேல் அரசியல் செய்வதற்குக்கூட தயங்காத காங்கிரஸ் கட்சி. என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்வது போல் அது மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் கிடையாது அது அமோனியா கேஸ் ஆகும், மேலும் அமோனியா வாயு என்பது மக்கள் சுவாசித்தால் இறப்பு நிச்சயம் ஆகும், 

அமோனியா வாயு பற்றி தெரிந்து கொள்ள



பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் கடந்த ஆண்டு 2020 ஜுலை மாதம் 24ம் தேதி ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள சிவதாஸ்புரா பகுதியில் ரயிலில் இருந்த டேங்கர் கீழே விழுந்து அமோனியா வாயு கசிந்தது. ஒரு டேங்கர் லாரியில் இருந்து அம்மோனியா வாயு கசியத் தொடங்கியம் வானத்தில் புகை பரவுவவதைப் பார்த்து,  மக்கள் மத்தியில் பீதி பரவியது. 

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். காவல்துறையினர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், அம்மோனியா வாயுவை கட்டுப்படுத்தினர்

ஆனால் உண்மை தெரியாமல் பலரும் அது ஆக்சிஜன் டேங்கர் என்றும் அதனை வீணாக்க்குகின்றார்கள் என பொய்யாக ஷேர் செய்கின்றார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this