FACT CHECK: பூமியில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் தவறான வீடியோ! உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பூமியில் விழுந்த ராக்கெட் என்று ஒரு வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்திய கடற்பரப்பில் விழுந்த சீன ராக்கெட் கிடையாது
அந்த வீடியோ கடந்த 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய செவ்வாய்க் கிரகத்துக்கான மாதிரி விண்கல பரிசோதனை ஆகும்
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார் ஷிப்' ராக்கெட் சோதனை ஓட்டமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது வெற்றிகறமாக பயனத்தை தொடங்கியபின் தரையிறங்கிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது அதன் வீடியோ.......
அந்த சோதனை சோதனை தோல்வியில் முடிந்தது. அந்த வீடியோவை சீனராக்கெட் வீடியோ என பொய்யாக பரப்பி வருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி