Breaking News

FACT CHECK: மு.க.ஸ்டாலினுக்காக 2.5 கோடியில் துபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட தலைமை செயலக வடிவில் கேக்? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதைக் கொண்டாடும் வகையில் உலகப் புகழ்பெற்ற துபாயின் Debbie Wingham நிறுவனத்தால் 2.5 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை தனி விமானத்தில் கொண்டு வந்ததார்கள் என  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த  கேக் துபாயில் தயாரனது இல்லை, தனி விமானத்தில் வரவும் இல்லை அதன் விலை 2.5 கோடியும் இல்லை அனைத்தும் பொய்யான தகவல்

அந்த கேக் தயாரானது நம்ம சென்னை கிண்டியில் உள்ள  Cake Square என்னும் கடையில் தான் இது தயாரானது இதன் விலை ரூ30,000/- மட்டுமே

சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து  Cake Square  அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback