Breaking News

என்னதான் நடக்குது லட்சத்தீவில்.... என்ன தான் பிரச்சனை ...முழு விவரம்....

அட்மின் மீடியா
0

கேரளக் கரையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், அரபிக்கடலில் அமைந்திருக்கிறது லட்சத்தீவு அங்கு அங்கு மக்கள் தொகை சுமார் 65,000 மட்டுமே.மீன்பிடித் தொழில்தான் இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம். சுற்றுலா தளம் என்பதால் அதன் மூலமும் மக்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் வர்மா, கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளாக நியமித்து வந்த நிலையில் முதல்முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது மத்திய அரசு. 

இவர் அங்கு சென்றதில் இருந்து இந்த தீவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் , அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் முக்கியமாக

மாட்டிறைச்சி தடை, 

மதுவிலக்கு நீக்கம், 

கடலோர மக்களின் குடில்களை அகற்ற உத்தரவு

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்ககூடாது

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது .

அரபிக்கடலின் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் லட்சத் தீவுக்கென தனிச் சிறப்பான நிலவுரிமைச் சட்டம் உள்ளது லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டப்படி, லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, தற்போது யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம்

என்பது உள்ளிட்ட பிரபுல் படேலின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து இவரை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 

லட்சத்தீவை மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாகவும், தான் லட்சத்தீவு மக்களுடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.


கேரள காங்கிரஸ் தலைவரான ரமேஷ் சென்னிதலா 

குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் படேலை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளை முழுமையாக மதிக்க குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

லட்சத்தீவில் இருந்து வரும் செய்திகள் மிகவும் தீவிரமானவை ,மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாசாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை ஏற்க முடியாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளா எம்.பி இளமாறன் கரீம் 

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பிரஃபுல் கே. பட்டேல் உடனடியாக லட்சத்தீவில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


நடிகர் பிருத்திவிராஜ் தனது டிவிட்டரில்

அதில், ''நான் 6-ம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியிலிருந்து லட்சத்தீவிற்கு சுற்றுலா சென்றோம். பின், 'அனார்கலி' படத்திற்காக அங்கு சென்றுள்ளேன். இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருக்கிறேன். நண்பர்களும், நிறைய நினைவுகளும் அங்கு கிடைத்தது. என்னுடைய முதல் இயக்கத்தில் வந்த 'லூசிஃபர்' படத்தின் போதும் அங்கு சென்றேன். இவைகள் எல்லாம் அங்குள்ள இனிமையான மக்கள் இல்லையென்றால் நடந்திருக்காது.

சமீபகாலமாக, அங்குள்ள மக்கள் லட்சத்தீவில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து என்னிடம் கூறி வருகின்றனர். 

இங்கு நடக்கும் பிரச்னைகளை பொதுவெளியில் வெளிப்படுத்துங்கள் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், நான் இதைப்பற்றி எந்தக் கட்டுரையும் எழுதப் போவதில்லை. அங்கு நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் ஆன்லைனில் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாற்றங்கள் நிச்சயம் அங்குள்ள மக்களுக்கு ஏற்றதல்ல என நம்புகிறேன் நம், அரச கட்டமைப்பு மீது நம்பிக்கையிருக்கிறது. அதேப் போல மக்கள் மீதும் நம்பிக்கையிருக்கிறது. அங்குள்ள மக்கள் புது அதிகாரியினால் மகிழ்ச்சியாக இல்லை. எல்லாவற்றையும் விட செயல் தான் சிறந்தது என்று கருதுகிறேன். ஆகவே, அங்குள்ள பிரச்னையைப் பற்றி அந்த மக்களிடம் அரசு கேட்க வேண்டும். இந்த உலகில் லட்சத்தீவு ஒரு நல்ல இடம். நல்ல மனிதர்களும் அங்கு வாழ்கின்றனர்'' என்று பதிவிட்டுள்ளார். 

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அமைதியான குடியேற்றத்தின் வாழ்க்கை முறையை சீர்குலைப்பது வளர்ச்சி எனும் நடவடிக்கையின் வழிமுறையாக எவ்வாறு மாறுகிறது? என கேள்வி எழுப்பியுள்ள அவர் மிகவும் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை அச்சுறுத்துவது எவ்வாறு நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்? லட்சத்தீவு மக்கள் புதிய அதிகாரியால் மகிழ்ச்சியாக இல்லை என விமர்சித்துள்ளார்.


 

Tags: இந்திய செய்திகள்

Share this