Breaking News

மறு அறிவிப்பு வரும் வரை இந்தியா மீதான தடை தொடரும் அமீரகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாது அலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருதால், இந்தியா மீதான பயணத் தடையை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் இயங்க மே 14 வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இத்தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளது

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியப் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல, அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this