Breaking News

தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு 15.05.2021 நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை


புதிய கட்டுப்பாடுகள் 

அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் - 17ம் தேதி காலை முதல் இபதிவு நடைமுறைக்கு வரும்

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை 17.05.2021 காலை 6 மணி முதல் கட்டாயமாக்கப்படும்.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை

தனியாக செயல்படும் மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி; பிற கடைகள் திறக்க தடை

தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

மின் வணிக நிறுவனங்கள் மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும் முழு விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1P9AIwI5IlbY7bJH-cl8dqdZzaj4wnCNw/view?usp=sharing








Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback