Breaking News

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு? தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 


இந்நிலையியில் இன்று காலை 11 மணிக்கு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Tags: தமிழக செய்திகள்

Share this