Breaking News

இனி தமிழ் மொழியில் BE படிக்கலாம்..!

அட்மின் மீடியா
0

னி தமிழ் மொழியில் BE படிக்கலாம்..! வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 



பொறியியல் உள்ள அனைத்து துறைகளின் பாடங்களும் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழிலும் பொறியியல் கல்லூரி படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பல வருடங்களாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது

இந்நிலையில் வரும்  கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7 மொழிகளில் படிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

எனவே இனி தமிழிலும் பொறியியல் பாடங்கள் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Share this