நாளை உருவாகிறது டவ்-தே புயல் : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழை
அட்மின் மீடியா
0
அரபிக்கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் உருவாவதால் தமிழகம், கேரளாவில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.இதனால் அரபிக்கடலில் உருவாகும்
புதிய புயலுக்கு டவ்-தே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்

