Breaking News

5 லட்சம் உதவிதொகை: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு..!

அட்மின் மீடியா
0

கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான " கல்பனா சாவ்லா விருது " ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் , சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. 

இந்த விருதில் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த , துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

  2021 - ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் , சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது htss://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசுச் செயலாளர் , பொதுத் துறை , தலைமைச் செயலகம் , சென்னை -600 009 அவர்களுக்கு 30.06.2021 - க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். 

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Share this