அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்!18 ம் தேதி கரையைகடக்கும்
தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டவ்-தே புயலாக உருவானது.
அதி தீவிர புயலாக மாறும் கரையை கடக்கும் போது இதன் வேகம் 160 கிமீ வரை கூட இருக்கும். டவ்-தே புயல் காரணமாக இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 18- ந் தேதி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த புயல் குஜராத் அருகே அல்லது பாகிஸ்தான் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
LIVE: அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் நிலையை அறிந்து கொள்ள -முழு விவரம்
Tags: தமிழக செய்திகள்