இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; 11 நாட்களாக நடைபெற்று வந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது!
அட்மின் மீடியா
0
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; 11 நாட்களாக நடைபெற்று வந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது!
காசா போர் முனையில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 11 நாட்களாக தாக்குதல் நடந்து வநதது. இதுவரை காசாவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக்கள் இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் குண்டுவீச்சில் பலியாகியுள்ளார்கள்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சண்டையை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யபட்டுள்ளது
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடள் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த ஒப்பந்தம் வெள்ளி கிழமை அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
SOURCE:
Tags: வெளிநாட்டு செய்திகள்