நாங்கள் இஸ்லாமியர்கள் என்பதால் எங்கள் மீது குண்டு வீசுகின்றார்கள் காசாவின் 10 வயது சிறுமியின் கண்ணீர் வைரல் வீடியோ
நாங்கள் இஸ்லாமியர்கள் என்பதால் எங்கள் மீது குண்டு வீசுகின்றார்கள், குழந்தைகளை நோக்கி ஏன் ஏவுகணைகள் அனுப்பி கொலை செய்கிறீர்கள் - உடைந்து அழும் 10 வயது காசா சிறுமி
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் மே-15-ம் தேதியில் இருந்து இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காஸா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோவில் பேசும் சிறுமியின் பெயர் அப்தெல்-தைஃப்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான யுத்தத்தில் எங்க எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது
நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை
இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையால் தரைமட்டமான கட்டங்களை காண்பித்து நீங்கள் இதையெல்லாம் பாருங்கள். இதில் நான் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகிறார்.
இதை சரிசெய்ய முடியுமா. எனக்கு 10 வயதுதான் ஆகிறது. இதை என்னால் இனி சமாளிக்க முடியாது எனக் கூறி உடைந்து அழுகிறார்
நான் ஒரு டாக்டராகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றாக மாறி என் மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் என்னால் முடியாது. காரணம் நான் ஒரு சிறுமி. எனக்கு பயமாக இருக்கிறது. என் மக்களுக்கு நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? நாங்கள் அப்படி என்னதான் செய்தோம்?” என்று கண்ணீருடன் தொடர் கேள்விகளை எழுப்புகிறார்.
நாம் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்கள் நம்மை வெறுப்பதாக என்னுடைய குடும்பத்தினர் கூறுகிறார்கள். நாம் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை என்கிறார்கள்.
இங்கு பாருங்குள் என்னைச் சுற்றி குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் குழந்தைகள். ஏன் எங்களை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி எங்களை கொலை செய்கிறீர்கள்.' என அச்சிறுமி அழுகிறார்.
"I don't know what to do."
— Middle East Eye (@MiddleEastEye) May 17, 2021
A 10-year-old Palestinian girl breaks down while talking to MEE after Israeli air strikes destroyed her neighbour's house, killing 8 children and 2 women#Gaza #Palestine #Israel pic.twitter.com/qYdG5PlwOO
Tags: வைரல் வீடியோ