FACT CHECK சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக வாட்ஸ் அப் வதந்தி ! உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளார்கள் என்று ஒரு ஆடியோ மற்றும் வீடியோ பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த ஆடியோ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் பரவியது, மீண்டும் திரும்ப தற்போது பரவி வருகின்றது
ஆனால் அதில் குறிப்பிட்டது போல் எதுவும் உண்மை இல்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 21.02.2019 அன்று தஞ்சையில் நடந்தது ஆகும்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏழாம் வகுப்பு மாணவியிடம் நான் உனது அப்பா எனவும் தன்னோடு ஊருக்கு வருமாறு வற்புறுத்தி ஏழாம் வகுப்பு சிறுமியிடம் இளைஞர் ஒருவர் தகராறு செய்திருக்கிறார் அந்த சிறுமி கத்தவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அந்த நபரை அடித்த வீடியோவை தான் தற்போது சேலத்தில் நடந்தது என ஷேர் செய்கின்றார்கள்
தான்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி