Breaking News

அரியர் தேர்வுகளை ரத்து உத்தரவை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர் \அந்த வழக்கு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 


அப்போது  அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது எனவும், மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த தாக்கல் செய்த வழக்குகளை ஏப்ரல் 15க்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback